திருவண்ணாமலை அருகே வெட்டிக்கொலை: ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான பரிதாபம்
திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வந்தார்,. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4)என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உண்டு.
கணவன்-மனைவி இடையே நீண்டநாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பழனி அரிவாளால் மனைவி உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டினார். 6 பேரும் இறந்துவிட்டதாக கருதிய பழனி தன்னைத்தானே அரிவாளால் வெட்டிக்கொண்டு இறந்து போனார்.
.குடும்பத்தையே கொலை செய்து விட்டு பழனியும் இரண்டு விட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனி உள்பட 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிகா என்ற சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்