போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி மறியல்; சமத்துவ மக்கள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
![போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி மறியல்; சமத்துவ மக்கள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2022/12/97030642-ec6a-45dd-826e-35750d7ea2eb-850x560.jpg)
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மது, பான் பராக் போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர், இதற்கு போலீஸ் அனுமதி தரவில்லை.
இதனால் போலீசாரை கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று காலை தூத்துக்குடியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் உள்பட அனைவரையும் கைது செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்களில் ஏற்றி தூத்துக்குடியில் கல்யாண மண்டபம் கொண்டு செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)