கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பாக நடந்த இந்த முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன் அய்யர் தலைமை வகித்தார் புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார் மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் முகாமினை துவக்கி வைத்தார்
டாக்டர் வித்யா முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார் முகாமில் கலந்துகொண்ட 60 பேரில் 14 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர் முகாமில் நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம் தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் ஆவல்நத்தம் லட்சுமணன் ஏ ஐ டி யு சி தலைவர் உத்தன்ராமன், ஐ.என்.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை தலைவர் காளிதாஸ், ரத்ததான கழக நிர்வாகி ஜீவா மக்கள் நலம் அறக்கட்டளை நிர்வாகிகள் மாரிமுத்து கணேஷ் முகமது ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்