• May 20, 2024

Month: November 2022

செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த 5 அடி நீள உடும்பு ;பெண்கள் அலறல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.இன்று காலை மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டமும் ஓரளவு இருந்தது.அருவியில் ஆனந்தமாக குளித்து கொண்டிருத்தனர்.அப்போது அருவியின் மேல்புறத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு கீழே விழுத்தது..தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்தது. இதனால் […]

செய்திகள்

“பேனர் வைத்ததில் ஊழல்: ஆதாரம் என்னிடம் இருக்கிறது”-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை பட்டினப்பாக்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-நம்ம ஊரு சூப்பர்’ இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை ஆதராத்துடன் என்னிடம் உள்ளது. தஞ்சாவூரில் 1 விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜி.எஸ்.டி. வரி ரூ.603 சேர்த்து மொத்தம் ரூ.7,906 செலவிடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. […]

செய்திகள்

தி.மு.க. மாணவர் அணி செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ நியமனம்

தி.மு.க .மாணவர் அணி நிர்வாகிகள் அறிவிக்கபட்டு உள்ளனர். கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:-மாணவர் அணி தலைவர்- ராஜீவ்காந்திமாணவர் அணி செயலாளர் – சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏமாணவர் அணி இணை செயலாளர்கள்- பூவை சி,ஜெரால்டு, எஸ்,மோகன்மாணவர் அணி துணை செயலாளர்கள்- மன்னை தா.சோழராஜன் , ரா.தமிழரசன்,அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி

தூத்துக்குடி

கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்; 3 அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மற்றும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் பேசினார்கள். ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் .கி. செந்தில்ராஜ்,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற […]

செய்திகள்

முதியவருடன் உல்லாசம்: செல்போனில் படம் எடுத்து மிரட்டி ரூ. 27 லட்சம் பறிப்பு;

கேரள மாநிலம் திருச்சூர், குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் நிஷாத். இவரது மனைவி ரஷிதா (வயது 28). இருவரும் சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன்மூலம் இருவருக்கும் பலரது தொடர்பு கிடைத்தது. இதில் பணம் படைத்த முதியவர்கள் யார்-யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு கொண்டார்.இதில் மலப்புரம் பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அந்த முதியவரை தன் வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 74 பேருக்கு பாராட்டு சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-*வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் இறந்த நபரையும் சம்மந்தப்பட்ட எதிரியையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா,நீதிமன்ற சம்மன் சார்பு பணியில் ஒரே மாதத்தில் 78 சம்மன்களை […]

செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கத்துக்கு தடை- `இது சரித்திர முடிவு’ என்று ரூபி

கடந்த நவ. 15 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகத் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி நேற்று அறிவித்தார்.இந்நிலையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை முறையற்றதாக இல்லை என்பதாலும் இயற்கை நீதியின் கொள்கைக்கு முரணாக இருப்பதாலும் ரூபி மனோகரனின் நீக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும், தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் […]

செய்திகள்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் வீடு திரும்பினார்

நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் தனியார் டி.வி. தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இதுமட்டுமல்லாமல், கட்சி பணியிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார்.மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று முன் தினம் மதியம் சென்னை திரும்பினார். நேற்று முன் தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் […]

சினிமா

கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை?

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா […]

செய்திகள்

பழனி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது; தங்கம், வெள்ளியும் குவிந்தது

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக கருதப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மட்டுமின்றி ரோப்கார் மற்றும் இழுவை ரெயில் வசதியும் உள்ளன,இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் எண்ணிகையும் அதிகம் இருக்கும். தமிழக அரசின் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோவில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது,எண்ணிக்கை முடிவில் உண்டியல் காணிக்கை2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 ரூபாய் இருந்தது. மேலும் […]