9 செயற்கைகோள்களுடன் , ‘பி.எஸ்.எல்.வி.சி-54’ ராக்கெட் , நாளை விண்ணில் ஏவப்படுகிறது
![9 செயற்கைகோள்களுடன் , ‘பி.எஸ்.எல்.வி.சி-54’ ராக்கெட் , நாளை விண்ணில் ஏவப்படுகிறது](https://tn96news.com/wp-content/uploads/2022/11/pslv_c54-sixteen_nine.webp)
விண்ணில் பாய தயாராக இருக்கும் ராக்கெட்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ‘பி.எஸ்.எல்.வி.சி-54’ என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் ‘ஓசன்சாட்03’ என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்லும்.
இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ‘கவுண்ட் டவுன்’ என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள், 25-ந்தேதி (இன்று) தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணியாகும்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)