• May 20, 2024

Month: October 2022

செய்திகள்

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்திகள்

தமிழகத்தில் 1௦-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 7.10.2022: தமிழ்நாடு, […]

செய்திகள்

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட கனிமொழி, மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.இதன்படி மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் […]

கோவில்பட்டி

பூ வியாபாரி வெட்டிக்கொலை; தந்தை-மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி அருகே கயத்தாறு அடுத்த செட்டிக்குறிச்சியை சேர்ந்தவர் அழகுதுரை (வயது 35). பூ வியாபாரி. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.அழகுதுரை நேற்று தனது உறவினருடன் கயத்தாறு மஞ்சநம்பி கிணற்று பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மதுகுடிக்க சென்றார். அப்போது அழகுதுரைக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார் உரிமையாளரான கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்பவர் தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் […]

செய்திகள்

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச. – சி.ஐ.டி.யு. இடையே மோதல்

திண்டுக்கல் போக்குவரத்து பணிமனை 2 ல் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு.தொழிர்சங்கங்கள் இடையே கருத்து வேறுபாட்டால் வார்த்தை போர் வெடித்துள்ளது.இரு தரப்பினரின் அறிவிப்பு பலகையில் மாறிமாறி எழுதப்பட்டுள்ள வாசகங்களால் சர்ச்சை வெடித்து உள்ள்ளதுதொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அறிவிப்பு பலகையில், “தொழிலாளர்களை ஏமாற்றி பலா லட்சங்களை வாங்கி சுருட்டும் திண்டுக்கல் கிளை -2 சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மாமியார் உடைத்தால் மண் சட்டை மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?” என்று எழுதப்பட்டிருந்தது. இதே போல் திண்டுக்கல் அரசு […]

செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலி: தூத்துக்குடியை சேர்ந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வந்தனர்.பின்னர், மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தொகுதிக்கு தேவையான 1௦ திட்டங்கள் பட்டியல் ; கலெக்டரிடம் கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவையான முக்கிய 1௦ திட்டங்கள் பற்றி பட்டியல் தரும்படி எம்.எல்/ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.அதன்படி ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.வும் தனது தொகுதிக்கு தேவையான முக்கிய திட்டங்கள் பட்டியலை ஒப்படைத்து வருகிறார்கள்.அந்த வகையில் கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து முக்கியமான 1௦ திட்டங்கள் அடங்கிய பட்டியலை ஒப்படைத்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டங்கள் விவரம் வருமாறு:- மேற்கண்டவாறு பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செய்திகள்

ஓசிப்பயணம்: பஸ்களில் செல்லும்போது பெண்கள் அவமானப்படுகிறார்கள்-டி.ஜெயக்குமார் சொல்கிறார்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி :- தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். பஸ் பயணத்தை ஓசி பயணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளாரே..?பதில் :- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு உன்னதமான திட்டம் தாலிக்குத் தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றி எல்லோருக்கும் ஒரு சவரன் தங்கத்தை அளித்தார். இந்த திட்டத்திற்கு ரூ. 7 […]

செய்திகள்

4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை; தமிழகத்தில் 489 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 284 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 489 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 101 பேர், செங்கல்பட்டில் 44 பேர், கோவையில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 53 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 66 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பூக்கள் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஆயுதபூஜையையொட்டி […]