• May 20, 2024

கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ; அதிக வார்டுகளில் தி.மு.க.வெற்றி

 கடம்பூர் பேரூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ; அதிக வார்டுகளில் தி.மு.க.வெற்றி

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1,2 மற்றும் 11வது வார்டுகளில் சுயேட்சையாக போட்டியிட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் போட்டியின்றி தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
மற்ற 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணைத்தின் வழிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பதால் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இதனை எதிர்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாகராஜா, ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும், மீதமுள்ள 9 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையெடுத்து கடந்த 29ந்தேதி 1,2 மற்றும் 11வது வார்டினை தவிர்த்து மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு இருந்த இறுதி வேட்பாளர்களை கொண்டு தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் கயத்தாரில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைக்கபப்ட்டன. தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.9 வார்டு தேர்தலில் அதிக வார்டுகளில் தி.மு.க.வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் தி.மு.க. 6 , காங்கிரஸ் 1, ம.தி.மு.க. 1, சுயேட்சை 1 வீதம் வெற்றி பெற்றனர், வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

3 வது வார்டு

வெற்றி வேட்பாளர்கள் சான்றிதழ் பெறும் காட்சி.

(தி.மு.க. வெற்றி)

பதிவான வாக்குகள் -129

கனகமணி (தி.மு.க.) 122

ஜோதிமணி (சுயே) -7

4வது வார்டு
(தி.மு.க. வெற்றி)

பதிவான வாக்குகள்-131

தாழபுஷ்பம் (திமுக) -119

உமா மகேஸ்வரி (சுயே) 12

5 வது வார்டு

(தி.மு.க. வெற்றி)
பதிவான வாக்குகள் -236

தமிழரசி (தி.மு.க.) 158

அரிய நாச்சியார் (சுயே) -16

ஆறுமுகத்தாய் (சுயே) 60

ஜெயசித்ரா (சுயே) -2

6வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பதிவான வாக்குகள் -212

சரஸ்வதி (தி.மு.க.) -139

முனியசாமி (சுயே)- 69

ஜெயசித்ரா (சுயே)-4

7 வது வார்டு
(காங்கிரஸ் வெற்றி)
பதிவான வாக்குகள்-112

மாரீஸ்வரி (காங்கிரஸ்) -102

சோலைசுந்தரி (சுயே) -10

8வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பதிவான வாக்குகள்-151

செல்லத்துரை (திமுக) -132

முத்துகிருஷ்ணன் (சுயே) 19

9.வது வார்டு
(தி.மு.க. வெற்றி)
பதிவான வாக்குகள்- 262

ஜெயராஜ் (திமுக) : 101

சுரேந்திரன் (பாஜக) -56

மகாலெட்சுமி (சுயே) :92

)
மாரிமுத்து (சுயே) – 13

10வது வார்டு
(ம.தி.மு.க.வெற்றி)
பதிவான வாக்குகள் 205

ரெங்கசாமி (ம.தி.மு.க.) -123

ராமசாமி (சுயே) 82

12 வது வார்டு
(சுயேட்சை வெற்றி)

பதிவான வாக்குகள் -160

முத்துமாரி – (சுயே) – 92

சுகன்யா (திமுக) – 68

மொத்தம் உள்ள 12 வார்டுகளில் தி.மு.க.கூட்டணி 8 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களிடம் தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் வரும் 10-ம்தேதி நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *