• May 9, 2024

Month: September 2022

கோவில்பட்டி

விஸ்வகர்மா பூஜை

கோவில்பட்டி விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் இன்று 2-ம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது. காலை 1௦.45 மணிக்கு தொடங்கிய விஸ்வகர்மா பூஜை இரவு 8.45 வரை நடைபெறுகிறது.ஸ்ரீ விஸ்வேஸ்வர விநாயகர் ஆலய பஜனை குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிற இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விஸ்வகர்மா இளைஞர் பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுக நயினார், செயலாளர் மனோகர், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.

கோவில்பட்டி

உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும் தான் மரியாதை- துரை வைகோ அதிரடி பேச்சு

கோவில்பட்டியில் ஒரு திரையரங்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ‌ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத்திரைப்படத்தை பார்த்தனர். பின்னர் துரை வைகோ பேசியதாவது:-இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் வைகோவிற்கு தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் பல […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நரிக்குறவர்கள ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்திதோப்பு நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தினை சிலர் ஆக்கிரமித்து கோவில் கட்டியுள்ளதாகவும், தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.அப்படிப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் ஊசி, பாசி விற்பனை செய்யும் நரிக்குறவர் மக்களை திருநங்கைகள் தாக்கி அவதூறாக பேசி வருவதாகவும், தாங்களை தாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் நரிக்குறவர் சமூகத்தினை சேர்ந்தவர்கள், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுப் பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 51 ஆம் ஆண்டு திங்கள் ஆய்வுப் பொழிவு மன்ற வளாகத்தில் நடைபெற்றது. தமிழர் தம் பெருமைமிகு வாழ்வியல் என்ற ஆய்வின் 2ம்தொடரில் வீரம் என்ற தலைப்பில் முனைவர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு மீரா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வே.ரா. நடராசன் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எஸ்.வி ஜுவல்லரி உரிமையாளர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகித்தார். மன்றச் செயலர் நம் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மன்றத்தின் துணைத் தலைவர் திருமலை முத்துசுவாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாடார் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாரச்சனை விழா நேற்று தொடங்கியது. அக்டோபர் 5 ந்தேதி வரை நடக்கும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்காட்சி அளிப்பார். தினமும் அம்பாளுக்கு ஸ்நபனசூக்காதிஜபங்களும், பிரஷன்னபூஜை, நவாபரன பூஜை, லட்சார்ச்சனையும் அதனை தொடர்ந்து தீப ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் புஷ்பாஞ்சலி நடைபெறும்கோவிலில் வைக்கப்பட்டுள்ள உற்சவர் கொலு அம்பாள் அபிஷேகம், உற்சவர் கொலு அம்பாள் தீப ஆராதனையும் நடைபெறும். நவராத்திரி […]

செய்திகள்

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு புதிய பதவி கொடுத்த ஓபன்னீர்செல்வம்; கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த ‘சீல்’ அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புறவழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி கோரி அமைச்சருக்கு வைகோ கடிதம்

கோவில்பட்டியில் 17 கி.மீ. புதிய புறவழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளிக்ககோரி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ம.தி.மு.க/பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்ட பகுதிகளையும் சாலை போக்குவரத்தில் இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் இந்த நகரம் விளங்குகிறது.ஓட்டப்பிடாரம், விலாத்திகுளம், சாத்தூர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து […]

செய்திகள்

தி.மு.க. வாரிசு அரசியலை மட்டும் செய்கிறது- ஜே.பி.நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இந்த புண்ணிய பூமிக்கு வந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து பலர் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதற்கு நமது பிரதமர் மோடியின் சிறப்பான திட்டங்களும், நிர்வாக திறமையுமே காரணம்.தமிழகம் பிரதமரின் இதயத்தில் இடம்பெற்றுள்ள மாநிலமாகும். மோடி கூட்டாட்சி முறையின் வழிமுறைகளை மிகவும் நம்புகிறார். தமிழக அரசு கூட்டாட்சி முறைக்கு ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் செயல்படவில்லை. […]

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகிற 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தசரா திருவிழாவில் தினந்தோறும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு […]

சினிமா

`பணத்துக்காக கொள்கையை மாற்ற மாட்டேன்’- நடிகர் ராமராஜன்

ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘சாமான்யன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் நடிப்பது பற்றி ராமராஜன் பேசியதாவதுஇந்தப் படத்தில் கதையும், திரைக்கதையும்தான் கதாநாயகன். இன்னொரு கதாநாயகன், ‘சாமான்யன்’ என்ற டைட்டில். நான் துப்பாக்கியை தூக்கி நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ‘இவர் வயற்காட்டில் வேலை செய்பவராச்சே… இவருக்கு ஏன் துப்பாக்கி’ என்று கேட்பார்கள்.100 கோடி ரூபாய் கொடுத்தாலும், தாறுமாறான படங்களில் நடிக்க மாட்டேன். இவருடைய படங்களுக்கு மட்டும் பெண்கள் கூட்டம் […]