• May 20, 2024

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்

 குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். பல லட்சம் பக்தர்கள் வேடமணிந்து தங்களது வேண்டுதலை செலுத்தும் இத்திருவிழா வருகிற 26-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தசரா திருவிழாவில் தினந்தோறும் கோவிலில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி சுவாமி எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். அக்டோபர் 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைக்கு சென்று அங்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இதை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.
இத்திருவிழாவிற்கானஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலைய துறை கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
பின்னர் அமைச்சர்கள், பக்தர்கள் மற்றும் தசரா குழுக்கள் வரும் பாதை, போக்குவரத்து வசதி எப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *