• May 20, 2024

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில் நவராத்திரி திருவிழா மற்றும் லட்சாரச்சனை விழா நேற்று தொடங்கியது. அக்டோபர் 5 ந்தேதி வரை நடக்கும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்காட்சி அளிப்பார். தினமும் அம்பாளுக்கு ஸ்நபனசூக்காதிஜபங்களும், பிரஷன்னபூஜை, நவாபரன பூஜை, லட்சார்ச்சனையும் அதனை தொடர்ந்து தீப ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு நேரத்தில் புஷ்பாஞ்சலி நடைபெறும்
கோவிலில் வைக்கப்பட்டுள்ள உற்சவர் கொலு அம்பாள் அபிஷேகம், உற்சவர் கொலு அம்பாள் தீப ஆராதனையும் நடைபெறும். நவராத்திரி விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தக்கார்-உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.
புற்றுக்கோவில்


கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரலிங்க சுவாமி அம்பாள் புற்றுக்கோவிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜை பெற்று தொடங்கியது முதல் மூன்று நாட்கள் துர்கா பூஜையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி பூஜையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜையும் நடக்கிறது.
முதல் நாளன்று காலை கோடி சக்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதணை நடைப்பெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் உள்ள நவராத்திரி கொலுவிற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், பிரேமா முருகன், எட்டப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *