• May 20, 2024

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுப் பொழிவு

 கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுப் பொழிவு

கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் 51 ஆம் ஆண்டு திங்கள் ஆய்வுப் பொழிவு மன்ற வளாகத்தில் நடைபெற்றது. தமிழர் தம் பெருமைமிகு வாழ்வியல் என்ற ஆய்வின் 2ம்தொடரில் வீரம் என்ற தலைப்பில் முனைவர் சம்பத்குமார் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு மீரா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வே.ரா. நடராசன் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எஸ்.வி ஜுவல்லரி உரிமையாளர் எம்.எஸ்.எஸ்.வி. பாபு முன்னிலை வகித்தார். மன்றச் செயலர் நம் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மன்றத்தின் துணைத் தலைவர் திருமலை முத்துசுவாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மற்றும் சரவணச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் காமராஜர் பதின்ம பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாண வர்கள் திருக்குறள் ஒப்புவித்தலிலும், பள்ளி அளவில் கட்டுரைப் போட்டியில் 6-8 வகுப்பு வரை “அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சா வழி என்ற தலைப்பிலும், 9-10 வகுப்பிற்கான கட்டுரைப்போட்டியில் “விடுதலை வேள்வியில் மகாத்மாவின் பங்கு” என்ற தலைப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஆசியா பார்ம்ஸ் பாபு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விநாயகா ரமேஷ், இசைவாணர் சந்திரசேகர், நாடார் காமராஜ் பதின்ம பள்ளி முதல்வர் பிரபு, தமிழாசிரியர்கள் முருகசரஸ்வதி, கெங்கம்மாள், பள்ளி ஆசிரியர்கள் அன்னலட்சுமி, சிவராணி, பரமேஸ்வரி, ஜெயக்கொடி, மணிமொழி நங்கை, உலக திருக்குறள் பேரவை ஜெயா ஜனார்தனன், வ.உ.சி.ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன், மகிழ்வோர் மன்றம் ஆசிரியர் செல்வின், உரத்த சிந்தனை கவிஞர் சிவானந்தம், கம்பன் கழகம் துரைப்பாண்டி, கண்ணன், பசுமை இயக்கம் குமார், மற்றும் கோவில்பட்டிக் கம்பன் கழகம், மகிழ்வோர் மன்றம், முத்தமிழ்மன்றம், உலக திருக்குறள் கூட்டமைப்பு, உரத்த சிந்தனை போன்ற பல்வேறு அமைப்புகளும். அறிஞர் பெருமக்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *