தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தவர் பொன்ராஜ். (வயது 63) விவசாயியான இவர் ஆடு வியாபாரமும் செய்து வந்தார்.இன்று(22.8.2022) பகல் 12 மணிக்கு தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர், அவர்களின் பிடியில் இருந்து இருந்து தப்பிக்க முடியாமல் பொன்ராஜ் சிக்கிக்கொண்டார். 4 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த […]
`தந்தையை அவமானப்படுத்தியதால் கொலை செய்தேன்’- கட்டிட தொழிலாளி கொலையில் கைதானவர் வாக்குமூலம்
கோவில்பட்டி புதுக்கிராமம் அருகே சிவாஜி நகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பாலமுருகன்(வயது 3௦). கட்டிட தொளிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்இந்த நிலையில் பாலமுருகனின் தந்தை பெருமாள்சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த வடிவேலு மகன் முத்துராஜ்(39) என்பவர் ரூ.1௦ ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாலமுருகனை முத்துராஜ் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் […]
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு கோவில் அமைத்தது அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரை உயிரென நேசிக்கும் குடும்பத்தை சார்ந்த கலைவாணன், சாந்தி கலைவாணன் அவர்களின் மகள் சங்கீதா ஆகியோர் எம்.ஜி.ஆர் பக்தர்களின் அன்போடும் ஆதரவோடும் அவர்களின் முழு ஒத்துழைப்போடும் எம்.ஜி.ஆர். கோவிலை உருவாக்கி பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.அந்த கோவிலின் நுழைவாயிலில் கோபுரம் ஒன்று அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்தனர். […]
முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று தனது 63- வது பிறந்தநாளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கேக்’ வெட்டி கொண்டாடினார்.கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த `கேக்’ வெட்டும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட கடம்பூர் ராஜூ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினார். அப்போது கூடி இருந்தவர்கள் வாழ்த்து கோஷம் […]
கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.காமராஜ் தலைமையில் பொருளாளர் காமராஜ் திருப்பதிராஜா இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, எஸ்.சி.மற்றும் எஸ்.டி.பிரிவு மாநில தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி நகர தலைவர் பங்காருசாமி, துணை தலைவர் ராஜசேகர், ஐ.என்.டி.யு.சி.சுந்தரராஜ், வேல்சாமி, […]
கோவில்பட்டி அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பெரியதாய் என்பவர் உயிரிழந்தை தொடர்ந்து. கடந்த ஜூலை மாதம் அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு வெயிலாட்சி, லாவண்யா இருவரும் போட்டியிட்டனர். இதில் வெயிலாட்சி வெற்றி பெற்றார். இந்நிலையில் வெள்ளாளன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சூரியமினுக்கன் கிராமத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வெயிலாட்சிக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்று கூறி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை […]
கோவில்பட்டி புதுக்கிராமம் சிவாஜி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், வள்ளுவர் நகரைச் சேர்ந்த முத்துராஜ்(39) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.சில மாதங்கள் கழித்து நேற்று, கடனாக கொடுத்த பணத்தை பாலமுருகன் திரும்பி கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் பணத்தை தருவவதாக முத்துராஜ் கூறியுள்ளார். இருந்த போதிலும் பணம் உடனடியாக வேண்டும் என்று கூறி மது போதையில் இருந்த பாலமுருகன், முத்துராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் கத்தியால் பாலமுருகனை […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி விசாரணை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக […]
வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் இருந்து 310 கிலோ மீட்டர் தூரத்திலும், மேற்கு வங்க மாநிலம் திகா பகுதியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலும், சாகர் தீவு பகுதியில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை […]
பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: முக்கிய ஆவணங்கள் மாயம்- நீதிபதி அதிர்ச்சி
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் […]