அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலை கட்சியில் தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். \இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்ட […]
திண்டுக்கல்லில் தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ் பண்டகசாலையில் விற்கப்படும் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். இலவச பஸ் வசதி. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் வழியாக சுற்றுலா பஸ் மூலம் கொடைக்கானல் வந்தனர். அங்கு பல்வேறு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை அதே பஸ்சில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.கொடைகானல் மலைப்பாதையில் டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த பள்ளத்தில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுவதால், பஸ் பள்ளத்தில் அடிப்பகுதிக்கு செல்லாமல் மரங்களுக்கு […]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பாராட்டுகளைப் பெற்று வருகிறதுஇந்நிலையில், இன்று காலை பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாரதிராஜாவுக்கு மருத்துவ […]
தமிழ் நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-நமது 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊராட்சிகளின் அதிகாரங்களை மீட்பதற்கும் மாநில தழுவிய உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 14.9.2022 புதன்கிழமை காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் .அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பெண் தலைவர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நமது உரிமைகளை வென்றெடுக்க உதவிடுமாறு மாநில […]
சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ராஜ். இவரது மனைவி, மகன் ஆண்டனி ஜான் (வயது 14) மற்றும் மகள் ஏஞ்சலின். இவர்கள் மூவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றிருந்தனர்.திருவிழா முடிந்த பின்னர் நேற்று இரவு அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது.அந்த உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டனர். அப்போது ஆண்டனி ஜானுக்கு அவரது தாயார் குளிர்பானம் வாங்கி […]
கோவில்பட்டி விஜயாபுரி துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மின்தொடரை கெச்சிலாபுரம், மந்திதோப்பு மின்தொடராக இரண்டாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மீதமுள்ள பணிகள் 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. எனவே மேற்படி பணிகள் நடைபெறும் பொருட்டு கிழவிபட்டி, கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளுக்கு 25-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் தெரிவித்து […]
கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது 63). நேற்று பகல் நேரத்தில் இவர் தெற்கு திட்டங்குலம் காலனி பகுதியில் உள்ள அவரது தோட்டத்துக்கு சென்றபோது அங்கு மறைந்து இருந்த 4 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடம் சென்று பொன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஒருவர் […]
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மருந்து, மாத்திரைகளை கடத்த திட்டம்; அண்ணன்-தம்பி உள்பட 3
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, பெட்ரோல், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அடிக்கடி அத்தியாவசிய பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தும் செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பாராசிட்டமல் சிரப் 2500 பாட்டில், லேசிஸ் மாத்திரை 1 லட்சம், மெட்ரோஜெல் […]
இந்திய விடுதலை போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது. தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் வெள்ளையனே வெளியேறு […]