ஊராட்சி தலைவர்களின் 11 அம்ச கோரிக்கைகள்; சென்னை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
![ஊராட்சி தலைவர்களின் 11 அம்ச கோரிக்கைகள்; சென்னை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/08/images-1.png)
தமிழ் நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நமது 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊராட்சிகளின் அதிகாரங்களை மீட்பதற்கும் மாநில தழுவிய உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 14.9.2022 புதன்கிழமை காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும்
.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பெண் தலைவர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு நமது உரிமைகளை வென்றெடுக்க உதவிடுமாறு மாநில கூட்டமைப்பின் சார்பாக உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அன்புடன் அழைக்கின்றோம். இந்த அறப் போராட்டம் வெற்றி பெற அனைத்து மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளும் மற்றும் ஒன்றிய கூட்டமைப்பு நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட மாநில கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது
11 அம்ச கோரிக்கைகள் விவரம்:
*சட்டத்திற்க்கு புறம்பாக மறைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும்
மற்றும் பட்டியல் இனத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் குறிப்பாக அனைத்து பெண் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
*பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை மாநில நிதி குழு மானியம் (SFC) ஜீரோ (0) பேலன்ஸ் இல்லாமல் 6 வது நிதிகுழு மானிய அடிப்படையில் மாதந்தோறும் ஊராட்சிகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும்.
*அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 க்கான திட்ட பணிகளுக்கு மாவட்ட முகமை மூலமாக நடைபெறும் மின்னணு டெண்டரை ரத்து செய்து அந்தந்த ஊராட்சியிலேயே டெண்டர் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*.ஊராட்சி கணக்கு எண் 2ல் உள்ள உபரி நிதியை அந்தந்த ஊராட்சி பொது நிதி கணக்கு 1 ற்க்கு மாற்றி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 1௦௦ நாள் பணி திட்டத்தில் வேலைகளுக்கான (Work Order) களை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)
வழங்குவதை ரத்து செய்து அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே Work Order வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*.ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் உள்ள ஊராட்சிகளுக்கு மக்கள் பணி தங்கு தடையின்றி செயல்பட பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு உட்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தனி அதிகாரம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு செயல் அலுவலர் தகுதிக்கான மாத ஊதியம் ரூபாய் 30 ஆயிரமும் ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 10 ஆயிரமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஊராட்சி செயலாளர் பணி நியமனம் மற்றும் ஊராட்சி செயலாளர்களை பணி இட மாற்றம் ஒழுங்கு நடவடிக்கை போன்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் முன்பு போல் தலைவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*துப்புரவு பணியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள் தூய்மை காவலர்கள் போன்ற காலி பணியிடங்களை ஊராட்சி நிதி நிலைக்கு ஏற்ப ஊராட்சி தீர்மானங்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*ஊராட்சி மன்ற தீர்மானங்கள், கிராம சபை தீர்மானங்கள் சுதந்திரமாக நிறைவேற்ற விடாமல் அரசு அதிகாரிகள் நாங்கள் சொல்லும் தீர்மானங்களை தான் நிறைவேற்றி தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்து தீர்மானங்களை கேட்டுப் பெறும் நிலை ஏற்புடையது அல்ல
ஊராட்சி நிர்வாகமும் கிராம சபையும் சுதந்திரமாக தீர்மானங்கள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*அரசு நிறுத்தி வைத்துள்ள வீட்டு வரி ஈட்டு மானியம், ஈமச் சடங்கு மானியம் முத்திரைத்தாள் கட்டணம், மீன்பாசி, பாரஸ்ட், மற்றும் கனிமங்கள் போன்ற ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய பங்கு தொகை அரியரோடு முழு தொகையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேற்கண்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேற்கண்ட தகவல் கிடைக்கப் பெற்றவர்கள் தகவல் கிடைக்காதவர்களுக்கும் தகவல் தெரிவித்து, ஒன்றிய மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் இந்த கவன ஈர்ப்பு உரிமை மீட்பு ஆற்பாட்டத்தை வெற்றி பெற செய்திட உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)