• May 19, 2024

Month: May 2022

கோவில்பட்டி

கிணற்றில் மூழ்கி கோவில்பட்டி மாணவி சாவு

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கேரளாவில் சென்டிரிங் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு தினேஷ் பாபு (வயது 20) என்ற மகனும், கிருஷ்ணபிரியா (16) என்ற மகளும் உண்டு. தினேஷ்பாபு கோவில்பட்டியில் உள்ள கல்லூரியிலும், கிருஷ்ணபிரியா தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பும் படித்து வந்தனர்.ராஜ்குமாரின் சொந்த ஊரான கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி பஞ்சாயத்து குமாரகிரியில் நேற்று முன்தினம் கோவில் கொடை விழா நடந்தது. எனவே சண்முகத்தாய் தன்னுடைய மகன் […]

செய்திகள்

பாளையங்கோட்டையில் அ.ம.மு.க. நிர்வாகி வெட்டிக்கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி என்ற மணி(வயது 40). இவர் பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியான இவர் பாளையங்கோட்டையில் தொழில் செய்வதையொட்டி சுப்பிரமணி குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு […]

கோவில்பட்டி

கோவில் உண்டியல் பணம் திருட்டு: கைதானவர் கோவில்பட்டி சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல பாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இதுகுறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த சிங்கராஜ் மகன் அருணாசலம் (வயது 45) மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பை சேர்ந்த சேர்ந்த கனகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி; கலெக்டர் ஆய்வு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. அதேபோல் தமிழக அரசும் உதவ முன்வந்தது. இலங்கைக்கு அரிசி, பால்பவுடர் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.மத்திய அரசும் அனுமதி அளித்து விட்டது.அதனைத் தொடர்ந்து ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இலவச கோடை கால பயிற்சி முகாம்;2-ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் 2.6.2022 முதல் 12.6.2022 வரை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமானது தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 வரை மட்டும் நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி உபகரணங்கள் வழங்கப்பட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆக்கி மைதானத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு: கண்டனம் வலுக்கிறது

கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி கடந்த 17ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.கோவில்பட்டியை சேர்ந்த செய்தியாளர்கள் முழு அர்ப்பணிப்புடன் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர்.நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நிர்வாகி மற்றும் உதவியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் சிலர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேரை வெளியேற சொல்லி இருக்கிறார்கள். ஏன் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் பதில் சொல்லாமல் , இந்தி பேச […]

கோவில்பட்டி

மீண்டும் வேகத்தடை கோரி பா.ஜ.க. சாலை மறியல்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே எட்டயபுரம் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் ஒரு பழக்கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே வேகத்தடை இருந்தது. கடந்த சில மாதங்களுக்சு முன்பு அந்த பாகுதியில் சாக்கடை பாலம் அகலபடுத்தும் பணி நடந்தபோது இந்த வேகத்தடை அகற்றப்பட்டு விட்டது,புதிதாக சாலை அமைத்தபோது வேகத்தடை அமையவில்லை. இதனால் நடைபாதை கடைக்காரர்களுக்கு வசதியாக போய்விட்டது. கடைக்கு முன்பு வாடிக்கையாளர்கள் வாகங்களை நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி அந்த […]

செய்திகள்

பார்வையாளர்களை மிரளவைத்த `கிடாமுட்டு’

திண்டுக்கல் குட்டியபட்டியில் தமிழ் மண்ணின் பாரம்பரிய வீர விளையாட்டானகிடாமுட்டு’ இன்று நடத்தப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் ,மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான முரட்டு ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.ஒவ்வொரு கிடாக்களும் பார்வையாளர்களை மிரள வைத்தன. கிடாக்களை அவற்றின் உரிமையாளர்கள் மிகவும் பாதுகாப்பாக கொண்டு வந்தனர்.திண்டுக்கல் குட்டியபட்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் இந்த கிடாமுட்டு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியில் தொழில் அதிபர் கே.எஸ்.எம்.சலீம், நாட்டாமை காஜாமைதீன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி, காங்கிரஸ் மாவட்ட […]

செய்திகள்

சமையல் சிலிண்டர் வெடித்து வீட்டு சுவர் இடிந்தது; 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் முலகலேடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. உடனே அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சத்தம் கேட்டு அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆனால், சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த வீட்டில் இருந்த ஜெய்னுபீ (60), அவரது மகன் தாது (36), மருமகள் சர்புன்னா (30), பேரன் ஃடோஸ் (6) 4 பேரும் சம்பவ இடத்திலேயே […]

செய்திகள்

பா.ம.க. புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு

பா.ம.க. தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர்.ஏற்கனவே கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வற்புறுத்தி வந்தனர்.இதையடுத்து அன்புமணியை தலைவராக தேர்வு செய்வதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது. அதன்படி சென்னை திருவேற்காட்டில் ஒரு திருமண மணடபத்தில் […]