கோவில் கொடை விழா: வேட்டைக்கு சென்ற சாமியாடி கிணற்றில் விழுந்து சாவு
![கோவில் கொடை விழா: வேட்டைக்கு சென்ற சாமியாடி கிணற்றில் விழுந்து சாவு](https://tn96news.com/wp-content/uploads/2022/05/hqdefault.jpg)
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவுக்கு மேல் 1.30 மணி அளவில் சாமக்கொடை நடைபெற்றது.
அப்போது தெய்வச் செயல்புரத்தை சேர்ந்த சாமியாடியான முருகன் (வயது 65) என்பவர் வேட்டைக்கு புறப்பட்டு சென்றார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)