தூத்துக்குடியை சேர்ந்த 4 வயது குழந்தை இன்று காலை 8 மணியளவில் கழுத்துச் சங்கிலியில் இருந்த உலோக டாலரை தவறுதலாக விழுங்கிவிட்டது. அந்த டாலர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதிலும் கஷ்டம் உண்டானது. இதனால் அந்த குழந்தையை பெற்றோர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவா வந்தனர். எக்ஸ்ரே பரிசோதனையில், மேல் உணவுக்குழாய் மட்டத்தில் தொண்டையில் வைர வடிவ உலோக டாலர் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு அறிவுறுத்தலின் […]
திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த், கடலில் புனித நீராடினார். கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனதை உணர்ந்தார். உடனடியாக அங்குமிங்கும் தேடிபார்த்தார். அனால் கண்களில் தென்படவில்லை.தங்கச் சங்கிலி கிடைக்காமல் போனதையடுத்து, மன வருத்தத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்யச் சென்றார். கோவிலில் காசி விஸ்வநாதன் […]
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை ரூ.4.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், வந்து செல்ல கேளரி போன்ற இருக்கைகள், அழகிய முத்துபோன்ற சிலைகள், செல்பி பிரியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள், ஊஞ்சல் மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்த அழகிய பூங்காக் திறப்பு விழா நடைபெற்றது. இதனை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்மந்தமாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் இன்று (6.06.2022) மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமான போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறும் சம்மந்தப்பட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கார்த்தீசன் (வயது 36). இவரது மனைவி தங்கம் . சம்பவத்தன்று கார்த்தீசன் மதுபோதையில் மனைவி தங்கத்திடம் இருசக்கர வாகனம் வாங்க தங்க நகைகளை தருமாறு தகராறு செய்துள்ளார். தங்கம் நகைகளை தரமறுக்கவே ஆத்திரமடைந்த கார்த்தீசன் மனைவி தங்கத்தை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து தங்கம் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம் வழக்குபதிவு […]
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை 45 பேருக்கு 2 நாட்கள் ‘காவலர்கள் நல்வாழ்வு பயிற்சி முகாம்” இன்று (4.6.2022) தொடங்கியது, பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-மனிதர்களின் வாழ்க்கை பயணத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரக்கூடியது. அதை சரி சமமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய மனபக்குவம் நமக்கு வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயந்து, தவறான வழிகளில் செல்லாமல், அதை தீர்ப்பதற்கான […]
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி குமரன் நகர் பகுதியை சேர்ந்த போஸ்கோ ராஜா என்பவரது மனைவி சகாய சித்ரா (வயது 52). இவர் போல்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அவரிடம் இருந்து 7 ¼ பவுன் தங்க தாலி செயினை பறித்த வழக்கில் லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் லேடன் (எ) பின்லேடன் (19) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 2 பேரையும் வடபாகம் காவல் நிலைய […]
தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக விதவை ஆதரவற்ற விதவை கணவனரால் கைவிடப்பட்ட பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் ஒரு பெண்ணுக்கு 5 ஆடுகள் வீதம் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டபிடாரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.இந்த சிலம்பம் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள அப்துல்கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வென்ற 16 மாணவ மாணவியர்கள் இன்று (3.6.2022) மாவட்ட […]
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சைக்கிள் பேரணி இன்று காலை நடைபெற்றது.இப்பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் கலெக்டர் செந்தில்ராஜ்,மேயர் ஜெகன் பெரியசாமி, பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுநல தொண்டு நிறுவனங்கள், சைக்கிள் ஓட்டும் சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள், பல்வேறு நிலையிலான பெரு வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ் சாலையில் அமைந்துள்ள […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020