உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ம்தேதி வரை திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவபவனி நடந்தது. விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிந்தபிறகும் ஆலயத்துக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று இரவு ஆயிரக்கனக்கானர்கள் கோவில் வளாகத்தில் கூடினார்கள். சிறுவர்களை கவரக்கூடிய வகையில் விளையாட்டு பொருட்கள் விற்கப்பட்டன, பொருட்காட்சியும் நடந்தது.
தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எம்.பொன்னையா தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்றுவதற்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி அதிக அளவில் கிடைப்பதற்காக தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 16 ஆயிரம் […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி ஊராட்சியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதல் கட்டமாக வீடுகள் கட்டப்படவுள்ளன.இந்த இடத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையெடுத்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, மாப்பிள்ளையூரணி, குளத்துள்வாய்பட்டி ஆகிய 3 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், மறுவாழ்வு மையங்களில் தரமான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருள் கடத்தல், கந்துவட்டி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகளின் சொத்தை சட்டப்படி முடக்குவது எப்படி என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இந்த் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் நந்தினி கலந்து கொண்டு சட்டப்படி […]
தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகளை பயன்படுத்தும்படி மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், இன்று (29.7.2022) விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு […]
.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், நினைவகங்கள், மணிமண்டபங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் அனைவரும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்,கூட்டத்தில் கலெக்டர் […]
அச்சிட்ட காகிதங்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை வழங்கக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் 65 டீக்கடைகள் ஆய்வு செய்ததில், 14 கடைகளில் நியூஸ் பேப்பர்களில் வடை மற்றும் இதர உணவுப் பொருட்கள் நேரடியாக வழங்குவது கண்டறியப்பட்டது.இதை தொடர்ந்து நியமன அலுவலரிடத்தில் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்பு அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், […]
தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாகடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு முற்றிலும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல பனிமயமாதா பேராலய திருவிழா நடக்கிறது. தூய பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5ம்தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் கொடிப்பவனி நடைபெற்றது.இன்று அதிகாலை காலை 4.30 மணிக்கு ஜெபமாலை […]
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி சென்னையில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் கப்பல் மூலம் அரிசி, பால் பவுடர் மருந்துகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இதன் தொடர்ச்சியாக இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பலின் மூலமாக ரூ.54 கோடி மதிப்பிலான 16356 டன் அரிசி, […]
தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது 449 பெண் பயிற்சி போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி போலீசாருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனமுடன் கையாள வேண்டும். தேவையில்லாமல் தங்களது புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற கூடாது. அதன் மூலம் உங்கள் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)