தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் துறைமும் சாலை திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் 25.3.26 ம்தேதி மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மது போதையில் இருந்தது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது. மேற்படி நபர் மீது […]
தூத்துக்குடி பூபாலராயபுரம், 6-வது தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தனசுடலைமணி (வயது 22). இவர் தூத்துக்குடி பிரையண்ட்நகரில் உள்ள தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் குளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். தருவைகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அரசு வாகனங்களை தவிர அங்கீகரிக்கப்படாத தனியார் வாகனங்களில் சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை (Red–Blue Strobe Lights) பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 38 வாகனங்களில் ஸ்ட்ரோப் விளக்குகள் அகற்றம். சிவப்பு-நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தற்போது தனியார் வாகனங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விளக்குகள் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், […]
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் (First Randomization) பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.இளம்பகவத் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான […]
தூத்துக்குடி விமான நிலையத்தில செய்தியாளர்களைச் சந்தித்தகனிமொழி எம். பி. கூறியதாவது: “ அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் சூழல் காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவையான பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இதனைச் சரிசெய்வதற்கான எந்தவொரு தெளிவான திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. இதனால் எரிவாயு உருளை தட்டுப்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேசி முடிக்கப்பட்டு இறுதி […]
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு ரசீது வழங்குதல், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏராளமான பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சுங்கச்சாவடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். மேலாளர் அவதேஷ் சிங், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச செய்திகளை அனுப்பியும், பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் […]
தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில், உள்ளூர் லாரிகளுக்கு திடீரென கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர் லாரிகளுக்கு, இந்தச் சுங்கச்சாவடியில் இதுவரை சலுகை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இரவு முதல் திடீரென ஒருமுறை சென்று வர ரூ. 585 என நிர்ணயித்து, […]
விளாத்திகுளம் அருகே பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் திறம்பட பணியாற்றி குற்றவாளியை கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறப்பாக பணிபுரிந்த 25 போலீஸ் அதிகாரிகளுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பாராட்டு சான்றிதழ் பெற்ற போலீஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு:- விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் […]
கடந்த மார்ச் 3-ஆம் தேதி, திருச்செந்தூர் கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள், தங்களது மேலாளரின் பிறந்தநாளை கொண்டாடினர். இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள பொது தரிசன வரிசை கட்டிடத்தை பயன்படுத்தியதோடு, அங்கு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி, பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து கோயில் நிர்வாகம் நடத்திய விசாரணையில்: சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை சாத்தப்பட்டிருந்த மதிய வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. […]
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியே பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் பொதுப் பார்வையாளர்களாக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, எலுச்சூரி ரத்னாகர ராவ் […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







