பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத்

 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க; இளம்ப்கவத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 988 நியாயவிலைக் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள 530261 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 500 குடும்பங்களுக்கு  இன்று 3.1.2025 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகின்ற 9.1.2025 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

]மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையினைப் பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்கள்/ குறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு ஆட்சியர் க.இளம்பகவத்  தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *