கோவில்பட்டியில் சுகாதார உதவியாளர் பயிற்சி சான்றிதழ்

செம்கார்ப் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பளிப்பு திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ஒரு மாதம் சுகாதார உதவியாளர் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த சுகாதார உதவியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ் தலைமை தாங்கினார்.

சிம் கார்ட் நிறுவன மேலாளர் செல்வகுமார் கலந்து கொண்டு சுகாதார உதவியாளர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார்.
கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா, பைபால் ட்ரீ பவுண்டேசன் நிறுவன பணியாளர்கள் ஆதி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சுகாதார உதவியாளர் பயிற்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்றனர்.


