டூவீலர் மெக்கானிக் அசோசியேஷன் சார்பில் ரத்ததான முகாம்

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி டூவீலர் மெக்கானிக் அசோசியேஷன் சார்பாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு அசோசியேசன் தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் முகாமினை துவங்கி வைத்தார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் துளசி லட்சுமி தலைமையில் மருத்துவமனை ஆய்வக நுட்பனர் சேவியர், செவிலியர்கள் மணிமேகலை, ராஜேஸ்வரி, மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் ரத்தம் சேமிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முகாமில் 50 பேர் ரத்ததானம் செய்தனர். சங்கத்தின் கௌரவ தலைவர் ஆழ்வார் அப்பன், துணைத் தலைவர்கள் சங்கராஜா, கனகராஜ்,முத்துக்குமரன், துணைச் செயலாளர் உத்தண்ட ராமன், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லையா பிஎஸ்என்எல் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜசங்கர் நன்றி கூறினார்

