பனை விதையை விதைத்தால் மட்டும் போதுமா? பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

பனை விதைகள்
பழங்காலம் தொட்டு பனை மரம் தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருக்கிறது.பனை மரத்தை ஒரு கற்பக விருட்சமாக தமிழர்கள் பாதுகாத்தனர்.
தற்போது பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் பனைமரம் வளர்ப்போம்…. பனை விதைகள் விதைப்போம்! என்ற குரல் சமீப காலமாக சத்தமாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
ஒரு கோடி பனை விதையை நடுவதற்காக தமிழக அரசு ஒரு இயக்கம ஆரம்பித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் பலவும் பனை விதைகள் விதைத்து வருகின்றன,
அதுமட்டுமல்லாது தோட்டக்கலைதுறை மூலமாக பனை நாற்றுகள் விற்பனை செய்ய படுகின்றன. பனை விதைகளை நடுவதற்காக ஏகப்பட்ட முயற்சிகள் இருந்தாலும்கூட நட்டபின் பராமரிக்க பனை பற்றிய அனுபவமிக்க விவசாயிகள் கூலி ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.
பனை மரம் வளர்க்க விதையை விதைத்தால் மட்டும் போதுமா? விதைத்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை
சொல்லித்தர சரியான நபர்கள் இல்லாததால் பனை நட்ட இடங்களில் பனையை பார்க்க முடியவில்லை. எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
பனைவிதைத்து முளைத்து ( வடலியாக-இளம்பனையின் பெயர்) முழுப்பயனாக 50.அடி உயரம் வரை வளர ஏறத்தாழ 15ஆண்டுகள் ஆகிவிடும். இப்போது எச்சரிக்கையாக ஆடுமாடுகளை அதன் அருகில் விடக்கூடாது. அவை அவற்றின் குருத்து( நுனி) யை கடித்தால் அதனுடைய வளர்ச்சி பாதிக்கும்.
பனை தானாக வளரும் என்ற எண்ணம் தான் பல பேரிடம் உள்ளது.அது தவறு.அப்படியே விட்டு விட்டால் இருக்கு, மட்டையும் காசோலையும் நிறைந்த பனையாக காட்சியளிக்கும்.அதனுடைய கருப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது.
வடலியாக இருக்கும் போது ( குட்டி பனை) கருக்கு மட்டையை வெட்டி , பத்தலை அறுத்து விட்டால் , தான் பனையின் நிறம் கருமை நிறம் பளிச்சென தெரியும்.(பந்தல் அறுப்பது கவனமாக செய்ய வேண்டும்.கொஞ்சம் ஆழமாக அரிவாள் பதிந்தாலும் , குருத்தில் கீறல் விழுந்து வடலி ( இளம்பனை) பட்டு விடும்.இதனை பனத் தொழிலில் அனுபவபட்ட விவசாயிகளால் தான் முடியும்.
இந்த தொழில் நுட்பத்தை அறிந்த கொள்ள இன்றைய இளைஞர்கள் ஆர்வமாக இல்லை. எனவே அரசு பனை விதைக்கவேண்டும் என்ற கருத்தை மக்களிடம் பரப்பும்போது இன்றைய இளைஞர்களுக்கு இதுமாதிரியான பயிற்சி பனை ஏற இயந்திரங்களில் பயிற்சி , பனை பொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்தால் தான் இத்தொழில் வளம் பெறும்.
இதற்கான விழிப்புணர்வை இன்றைய இளைஞர்கள் மத்தியில் எற்படுத்த நாம் அனைவரும் முன் வரவேண்டும். அதுமட்டுமல்ல பனை மர ஏற பயிற்சி , காப்பீடு போன்றவைகள் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தரப்பட வேண்டும்.
அப்போது தான் நம்முடைய மாநில சின்னமான பனை மரம் வளரும். நீண்ட காலமாக நம்முடைய அடையாள மாக நிற்கும்.
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
