பூவிசார் குறியீடு ஏன் ? எப்படி ?

இன்றைய தினத்தில் உலக வணிக அமைப்பின் ஓரு அங்கமாக நமது நாடு இந்தியா இடம் பெற்றுள்ள காரணத்தால் நம்முடைய வேளாண் விளைபொருட்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் , பாரம்பரிய உணவு பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் காட்சிபடுத்துவதால் நல்ல விலைக்கு விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது அதனுடைய உற்பத்தியும் அதிகரிப்பதால் தனிப்பட்ட விவசாயிகளும் பயன்பெறுவதுடன் நாட்டின் அன்னிய செலாவணி யும் மூலமாக நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்த உதவுகிறது இந்த பூவிசார் குறியீடு.
பூவிசார் குறியீடு என்பது ( GEROPHICAL INDEX) GI.TAG ) குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் , அல்லது பகுதி நகரம் / நாடு போன்ற வற்றுடன் தொடர்புடைய தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் அடையாளமே இந்த புவிசார் குறியீடு எனவும் GI.TAG ) அழைக்கப்படுகிறது.
எதனடைப்பில் இந்த புவிசார் குறியீடு யாரால் எப்போது இருந்து வழங்க படுகிறது தெரியுமா ?
உலக வணிக அமைப்பின் ( WORLD TRADING ORGANISATION) நம்முடைய நாடு ஓரு உறுப்பு நாடாக இணைந்து சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ள வசதியாக , இந்தியாவில் புவிசார் குறியீடு கள் சட்டம் ( பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999ஆண்டு நிறைவேற்ற பட்டு செப்டெம்பர் 2003யிலிருந்து நடைமுறைப்படுத்த பட்டு வருகிறது.இந்த சட்டத்தின் வாயிலாக நம்முடைய நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு பதிவு மற்றும் பாதுகாப்பு தருகிறது.நம்முடைய நாட்டில் இதுவரை 333பொருட்களுக்கு புவிசார் குறியீடு அடையாளம் வழங்க பட்டுள்ளது.
புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கும் பொருட்களுக்கு உண்மையான தனித்துவம், தரம் பாரம்பரியம் வரலாற்று சான்றுகள் இருக்க வேண்டும்.
அவை விவசாய பொருட்களாகவோ, கைவினைபொருட்களாகவோ இயற்கை சார்ந்த பொருட்களாகவோ இருக்க வேண்டும்.
புவிசார் குறியீடு பெற தமிழக அரசு வேளாண்மை துறை முலமாக விண்ணப்பித்த பொருட்கள் எவை ? தெரியுமா.
தமிழக வேளாண் உழவர் நலத்துறை முலமாக 34வேளாண் விளைப்பொருட்களுக்கு விண்ணப்பிக்க பட்டுள்ளன அவற்றில் முக்கியமான சாத்தூர் சம்பா மிளகாய், சாத்தூர் வெள்ளரி விருதுநகர் அதலைக்காய் மதுரை செங்கரும்பு ,இராமநாத புரம் சித்திரைக்கார் அரிசி, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் விண்ணப்பிக்க பட்ட 145பொருட்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர்வரை 59பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது.
புவிசார் குறியீட்டால் என்ன நன்மைகள்.
1) சர்வதேச அளவில் சந்தைபடுத்துதல்
2) போலிகளை கண்டறிருந்து சட்ட படி நடவடிக்கை மேற் கொள்ளல்.
3) உற்பத்தியும் விற்பனையும் அதிகரிப்பதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
4) அன்னிய செலாவணி வரவால் நாட்டின் பொருளாதார மேம்படுத்துதல்
5) பாரம்பரியங்கள் அழிவிலிருந்து பாதுகாக்க உதவுதல்.
என்ன ? உங்களுடைய பகுதியில் ஏதேனும் பாரம்பரிய தரமான பொருட்கள் இருந்தால் தெரிவித்து புவிசார் குறியீடு பெற உதவு வோம்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.
