• May 19, 2025

தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு உண்டு…

 தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு உண்டு…

தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டத்திலும் தென்னை தோப்புகள் உள்ளது..தென்னை சாகுபடி மற்ற சாகுபடி போல அல்லாமல் நிலையான நீடித்த வருமானத்தை தரவல்லது.

அத்தகைய சாகுபடியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கவும் இளநீர் வெட்டவும் பயிர்பாதுகாப்பு செய்திட மரம் எறுபவர்கள் தேவை அதிகமாக இருக்கும்.ஆனால் தற்போதைய கால கட்டத்தில மரம் எறுபவர்களை கிராமங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் உள்ளனர்

அவர்களுக்கும் மரம் எறும்போது, கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், எற்படும் ஆபத்தை நினைத்து மற்ற வேலைக்கு செல்லுகின்றனர்.என்ன தான் இயந்திரமாயமாக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் மரத்தை பழுதுபார்த்து காய்கள் வெட்டுவதற்கு ஆட்கள் தேவைபடுகின்றனர்.

எனவே தென்னை வளர்ச்சி வாரியம் மரம் எறும் தொழிலாளர்களுக்கு உதவியிடும் வகையில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கான சிறப்பான காப்பீட்டு திட்டம்( கேரா சுரக்ஷா) என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அத்துடன் மட்டுமல்லாது தென்னை மரம் ஏறும் பயிற்சி யும் கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர தகுதியான தொழிலாளர்கள் யார் ?

தென்னை மரம் ஏறுபவர்கள் ,நீரா தொழிலில் ஈடுபவர்கள்,தேங்காய் பறிப்பவர்கள், வீரிய ஓட்டு ரக நாற்று உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மரத்தில் பயிர்பாதுகாப்பு செய்பவர்கள் உட்பட அனைத்து வகையான தொழிலாளர்களும் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

வயது தகுதி = 18முதல் 65வரை 

என்ன வகைக்கு உதவி கிடைக்கும் ?

இறப்பு , ஊனமாகுதல், மருத்துவ மனை செலவு .பாதிக்கப்பட்ட நாட்களுக்கு தற்காலிக வருமான உதவி போன்றவை கிடைக்கும்.

இன்சூரன்ஸ் காப்பீடு இதுவரை ரூ.5லட்சமாக இருந்த நிலையில் தற்போது நடப்பாண்டு முதல் ரூ.7லட்சமாக உயர்த்தப் பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை செலவிற்காக ரூ.2லட்சம் வரை கிடைக்கும்.

இன்சூரன்ஸ் பிரீமியம்  எவ்வளவு தெரியுமா ? 

239 ருபாய் மட்டுமே. இந்த தொகையை ஆண்டுக்கு ஆண்டு பிரிமியமாக கட்டவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு தங்களுடைய வட்டாரத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் களையோ அல்லது மண்டல மேலாளார்  , தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் கோவை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

மேலும் கூடுதலான விபரங்கள் பெற www.coconut board.gov.in , 0422 299 36 84 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.நம்பிக்கையுடன் தென்னை மரம் ஏறுவோம் கேரா சுரக்ஷா ” இன்சூரன்ஸ் காப்பீடு காப்பாற்றும் .

அக்ரி சு.சந்திர சேகரன் ,வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *