மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைப்பதில் சிக்கல்
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு திருச்சி தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது/.
இந்த தொகுதிக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் பொதுசெயலாளர் வைகொவ்ன் மகனுமான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கபட்டு மனுதாக்கல் செய்ததுடன் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க எண்டும் ஏறனு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.
இதனால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கமுடியாது என்று உயர்நீதி மன்றம் உத்த்ரவிட்டுள்ளது.
ஏற்கனவே உயிர் போனாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்கமாட்டோம் என்று துரை வைகோ கூறி இருக்கிறார். எனவே சுயேச்சை சின்னம் ஏதாவது ஒன்றைதேர்வு செய்து அதில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.