கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்
![கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்](https://tn96news.com/wp-content/uploads/2024/03/c3227b1f-767f-4e09-9605-cdeb464517e0-850x560.jpeg)
கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 6-ம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. ஏப்ரல் 10 -ந்தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப், ஜே.சி.ஐ. இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு,அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு.
இங்கு விற்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.கண்காட்சிக்கான அனுமதி இலவசம்.
புத்தக கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/03/33aa92e7-1d44-4f2f-9e30-6d071e535a67-1024x680.jpeg)
புத்தக விற்பனை அரங்குகளை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிட்டார்
முதல் விற்பனையை ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு தொடக்கி வைக்க ரவிமாணிக்கம் பெற்றுக்கொண்டார்.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வீராசாமி,ஜேசிஐ நிர்வாகிகள் ரகுபதி, தினேஷ் பாபு,வர்ஷன், தீபன்ராஜ், சூர்யா, ஸ்டீபன்நரேஷ். உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)