சிந்தலக்கரையில் தேர்தல் பிரசார கூட்டம் ; மு க ஸ்டாலின் பங்கேற்பு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று தூத்துக்குடி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட் lடத்தில் கலந்து கொண்டார்.
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐ.யு.எம்.எல். வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
மு க ஸ்டாலின் வருகையொட்டி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
வேட்பாளர்கள் கனிமொழி மற்றும் நவாஸ் கனி ஆகியோரை மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.


