தூத்துக்குடி வடக்கு மாவட்ட த. மா. கா. தலைவராக கே.பி.ராஜகோபால் நியமனம்

கே.பி,ராஜகோபால்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக கோவில்பட்டி நகர தலைவராக இருக்கும் கே.பி.ராஜகோபால் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கே. பி. ராஜகோபாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தீவிர அரசியல் பணி ஆற்றி வரும் கே. பி. ராஜகோபால் மக்கள் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
