எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் தொடங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கினார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஒன்றியம் பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவிலில் எடப்பாடி கே.பழனிசாமி சுவாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேலம் தொகுதி வேட்பாளர் விக்னேஷ் க்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று மாலை திருச்சியில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்
