• May 10, 2024

கோவில்பட்டியில் குருத்தோலை ஏந்தி ஓசன்னா கீதம் பாடியபடி கிறிஸ்தவர்கள் பவனி

 கோவில்பட்டியில் குருத்தோலை ஏந்தி ஓசன்னா கீதம் பாடியபடி கிறிஸ்தவர்கள் பவனி

 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமபுரி பேரரசின் கட்டுப்பாட்டில் சீசர் என்பவர் தான் கடவுள் என்பதைப் போல் ஆட்சி செய்த காலத்தில் இறை மகன் இயேசு கிறிஸ்துவை வெற்றி ஆர்ப்பரிப்புடன் எருசலேம்  நகருக்குள் கழுதை மேல் அமர வைத்து மக்கள் ஒலிவ மர கிளைகள் ஏந்தி அரச மரியாதையுடன் வரவேற்று பவனியாக வந்தார்கள்

சீசரின் ஆட்சியை முடிவுகட்டி நம்மை காக்க வந்த இறை மகன் இவரே என்ற நம்பிக்கையில் யூத மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் வரவேற்றனர் ஏனெனில் மரித்து நான்கு நாட்கள் ஆகியிருந்த லாசர் என்பவரை கல்லறையில் இருந்து உயிரோடு எழுப்பியதையும், நோய்வாய் பட்டவர்கள் குணமடைந்ததையும் நேரில் கண்ட மக்கள் இயேசு கிறிஸ்துவை ஆரவாரமாக வரவேற்றதை  நினைவு கூறும் வண்ணம் இந்த குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது.

 இன்று காலை 7.30 மணி அளவில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்திற்கு தூய பவுலின் ஆலய குருவானவர்களும் இறை மக்களும் வந்தனர் இரு சபை அருட்தந்தையர்களும்குருத்தோலைகளை மந்திரித்து இறைமக்களுக்கு வழங்கினர்.

பின் இறை மக்கள் புனித சூசைய புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார் உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார் தூய பவுலின்(CSI ) ஆலய முதன்மை குருவும் ராகலன்ட் கவுன்சில் சேர்மனுமான அருட்திரு சாமுவேல் அடிகளார் உதவி குரு எப்ராயீம் ராஜ் அடிகளார் தலைமையில் இறை மக்கள் கையில் குருத்தோலை ஏந்தியவாறு பவனி வந்தனர்.

ஓசன்னா கீதம் பாடியபடி பவனியாக புதுரோடு, கடலையூர் மெயின் ரோடு, மில் தெரு, சாத்தூர் மெயின் ரோடு வழியாக தூய பவுலின் ஆலயம் வந்து சேர்ந்தார்கள். அங்கு இரு சபை அருட்தந்தையர்களும் இறை பிரசங்கம் வைத்தனர்.பின்னர் புனித சூசையப்பர் திருத்தல இறை மக்கள் அவர்கள் ஆலயம் வந்தனர் அங்கு அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினார்கள். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *