கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்த மாடுகள்
![கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்; சீறிப்பாய்ந்த மாடுகள்](https://tn96news.com/wp-content/uploads/2023/07/1743233-whatsapp-image-2023-07-07-at-122237-pm.webp)
கோவில்பட்டி அருகேயுள்ள கிழவிபட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன், மலையடி கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சின்ன மாடு, பூஞ்சிட்டு என்று இரண்டு வகையில் போட்டிகள் நடைபெற்றன. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாட்டு வண்டிகளும், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்த்தயத்தில் 11 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
இந்தப் போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்று எல்லையை தொட்டு சென்று பரிசுகளை தட்டிச்சென்றன. சீறிபாய்ந்து சென்ற காளைகளை மக்கள் சாலையின் இருபுறமும் நின்றபடி பார்த்து ரசித்தனர். சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை சேர்ந்த சுப்பையா மாட்டு வண்டி முதலிடத்தினையும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரஜோதி மாட்டு வண்டியும் முதலிடம் பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இந்தப் பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)