Month: January 2025

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்  படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. […]

செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் , சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். […]

கோவில்பட்டி

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்ககோரி த.மா.கா. நூதன போராட்டம்   

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 5 ஆயிரம்  ரொக்கபணம் வழங்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் காதுகளில் பூ சுற்றி கொண்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள தேரடி கருப்பசாமி கோவிலில் கோரிக்கை மனுவை மாலையாக கோர்த்து வழங்கினார்கள். மேலும் தேங்காய் விடலை போட்டு சாமி கும்பிட்டனர்., பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி தமிழ் மாநில காங்கிரஸ் […]

சினிமா

இந்த மாத இறுதியில் ‘வீர தீர சூரன் 2’ வெளியாகிறது

‘சேதுபதி, சித்தா’ படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன் 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது […]

சினிமா

`வணங்கான்’ படத்தில் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் – அருண் விஜய்

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம்  10-ந் தேதி பொங்கல் பண்டிகையை […]

சினிமா

சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் படம்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக […]

தூத்துக்குடி

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், செய்தியாளர்களிடம்  கூறியதாவது:- புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18-19 வயது வாக்காளர்களுக்கும், முகவரி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், நகல் அடையாள அட்டை கோரியவர்களுக்கும் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விரைவு அஞ்சல் மூலம் இது வரை 16799 அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள 33726 நபர்களுக்கு விரைவில் விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயது […]

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் உள்பட 32 நிர்வாகிகள்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.

கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   பேசும் போது கூறியதாவது:- பல்வேறு கட்டங்களில் பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை […]