பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்ககோரி த.மா.கா. நூதன போராட்டம்   

 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்ககோரி த.மா.கா. நூதன போராட்டம்   

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 5 ஆயிரம்  ரொக்கபணம் வழங்கக்கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் காதுகளில் பூ சுற்றி கொண்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள தேரடி கருப்பசாமி கோவிலில் கோரிக்கை மனுவை மாலையாக கோர்த்து வழங்கினார்கள். மேலும் தேங்காய் விடலை போட்டு சாமி கும்பிட்டனர்.,

பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா பொருளாளர் செண்பகராஜ் ,துணை செயலாளர் முத்துசாமி, இளைஞர் அணி தலைவர் எஸ் எ கனி, திருமுருகன் மாவட்ட பொதுச் செயலாளர் சுப்புராஜ் அய்யாதுரை

மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம், கோவில்பட்டி கிழக்கு வட்டாரம் சுப்பையா ,மாவட்ட பிரிவு சிங்கராஜ் ,செயற்குழு உறுப்பினர் ஜான் கென்னடி, சரவணன், மேற்கு வட்டார துணைத் தலைவர் கேசவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், நகர துணைத் தலைவர்கள் தங்கபாண்டியன் வட்டாரசெயலாளர் தங்கராஜ் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.பி.ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பெரிதும் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகையையொட்டி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000/- என்று தொடங்கி ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட்டது.

ஆனால், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின், அதனை ரூ.5000/-ஆக தரவேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து அவர் முதல்வராக பதவியேற்ற காலத்தில் இருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் எதுவும் மக்களுக்கு உதவுவதாக இல்லை.

அதிலும், இந்த ஆண்டு பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் இல்லையென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஒன்றிய அரசு பணம் தரவில்லையெனவும் விளக்கம் அளித்துள்ளனர். அப்படியென்றால் இதுநாள்வரை ஒன்றிய அரசு தரும் பணத்தில் நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டீர்களா? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.

கடும் நெருக்கடியிலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் பரிசுத் தொகுப்புடன் மக்களை வஞ்சனை செய்யாமல் ரூ.1000/- வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மக்களை தேர்தல் பறவைகளாக பார்க்கும் திமுக பரிசுத் தொகுப்புடன் பணம் இல்லையென மறுத்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதல்வர் தமிழர்கள் உரிமையுடன் கொண்டாடும் பண்டிகை. கலைஞரால் தை 1-ம் தேதி ஆண்டின் தொடக்க நாளாக அறிவிக்கப்பட்ட பண்டிகை. ஆனால், தற்போது முதல்வராக இருக்கும் அவரது மைந்தன் தமிழ் மக்களை பாராமுகமாக இருக்கிறார் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.

எனவே, ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பு தமிழ் மக்களுக்கும் பொங்கல் பண்டிகையை இன்புற்று கொண்டாடும் வகையில், தற்போது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்ன கோரிக்கை விடுத்தாரோ அதனை நினைவாக்கும் வண்ணம், இல்லையென்றால், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5000/- வழங்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் கூறுவது போல், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் வேற பேச்சு என்ற குற்றச்சாட்டு நிதர்சனமாகிவிடும் என்பதை முதல்வர் அறியாதது இல்லை.

இவ்வாறு என்.பி.ராஜகோபால் கூறி உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *