கோவில்பட்டி அருகே ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.
![கோவில்பட்டி அருகே ரூ.35 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்.](https://tn96news.com/wp-content/uploads/2025/01/makkalthodau4i.jpg)
கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும் போது கூறியதாவது:-
பல்வேறு கட்டங்களில் பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலனைசெய்து தகுதியான மனுதாரர்களுக்கு அவர்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்றையதினம் நடைபெறும் இந்த மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 91 பயனாளிகளுக்கு ரூ.35,06,190/-மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மக்கள் தொடர்பு முகாமின் முக்கிய நோக்கமே தொலை தூர கிராமங்களின் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் எந்தவொரு சிரமமும் இன்றி அரசின் திட்டங்கள் மூலமாக பயன்பெற வேண்டும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
இந்த சித்திரம்பட்டி கிராமம் வருவாய் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகவும், அதே நேரத்தில் வளர்ச்சிப் பிரிவு தென்காசி மாவட்டமாகவும் உள்ளது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு ஆட்சியர் இளம்பகவத் பேசினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)