• February 12, 2025

Month: January 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பாண்டவர்மங்கலம் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்  

கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து,  கிராம மக்கள் இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாண்டவர்மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா அன்புராஜ் தலைமை தாங்கினார். பாண்டவர் மங்கக்ல்ம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் […]

சினிமா

சிம்பு பட நடிகைக்கு தொடர்ந்து மிரட்டல்; போலீசில் புகார்

சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதியுடன்  ‘கலக தலைவன்’, ஜெயம் ரவியுடன்  ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் மற்றும்  பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், சமூக வலைதளங்களில் ஒருவர் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுவதாக சைபர் கிரைம் போலீசில் நிதி அகர்வால் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக நடிகை […]

சினிமா

தெலுங்கு படத்தின் கதாபாத்திரம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கருத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ‘அட்டகத்தி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் ,’காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், இவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்திலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக ‘உத்தரகாண்டா’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் நடித்திருக்கிறார். […]

சினிமா

அல்லு அர்ஜுன் அடுத்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்  

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில்  அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில்  நடிப்பில் கடந்த மாதம் 5-ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இப்படத்தையடுத்து அல்லு அர்ஜுன், திரி விக்ரம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், சமீபத்தில் தயாரிப்பாளர் நாக வம்சி இதனை உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்படம் தொடர்பான மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, அனிருத் இப்படத்திற்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி `உமா பிளாஷ்’ நா.பிச்சையா காலமானார்

கோவில்பட்டி ராயல் ஸ்டுடியோ உரிமையாளர் கோமதிநாயகத்தின் சீடரான நா.பிச்சையா, உமா பிளாஷ் என்ற பெயரில் ஸ்டுடியோ நடத்தி வந்தார். கோவில்பட்டி போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவராக இருந்தார். புகைப்பட துறையில்  நீண்ட கால  அனுபவமிக்க நா.பிச்சையா வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதமாக உடல்நலம் குன்றி இருந்தார். சில நாட்களுக்கு  முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை இரவு 11.05 மணிக்கு காலமானார். அவருக்கு இன்று 84 வயது முடிந்து நாளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நடக்கிறது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி  கோவிலுடன் இணைந்த நீலாதேவி-பூதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணி வரை சுந்தர்ராஜப்பெருமாள் சயனக்கோலத்தில் காட்சி அளித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.பூஜைகளை வரதராஜன் ஐயங்கார் செய்தார் இன்று மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இரவு […]

செய்திகள்

கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில்  ரூ.26 லட்சம், 45 பவுன் நகைகள் கொள்ளை

கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 50). இவரது மனைவி சவுரால் பேபி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுலைமான் கால்நடைகள் விற்பனை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருகிறார். முகமது சாலிஹாபுரத்தில் உள்ள இவரது வீட்டின் எதிரே புதிதாக வீடு கட்டி இருக்கிறார். ஆனால், அவர் இரவு நேரம் பழைய வீட்டில் தூங்குவது வழக்கம். புதன்கிழமை  இரவு சுலைமான் மற்றும் அவரது மனைவி, 2 மகள்கள் ஆகியோர் பழைய வீட்டில் தூங்கினர். மறுநாள் காலையில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி சந்தை, திறப்பு விழாவுக்கு தயார்; நகராட்சி கூட்டத்தில் தலைவர் அறிவிப்பு

கோவில்பட்டி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:- விஜயகுமார் (பாஜக):- சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் பேரில் நகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், கால்நடைகளின் உரிமையாளர் ஒருவர் என்னை மிரட்டுகிறார். அக்ரஹாரம் தெருவில் வாறுகால் அமைத்து 25 ஆண்டுகளாகி விட்டது. இதனால் அது மண்ணோடு மண்ணாகிவிட்டது. எனவே, அதனை சீரமைத்து, புதிதாக வாறுகால் அமைத்து தர […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

கோவில்பட்டி நகராட்சி 21 வது வார்டு ஆழ்வார்தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை  கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளருமான கருணாநிதி தொடங்கி வைத்தார். பொங்கல பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை இடம் பெற்றிருந்தது. நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, 21வது வார்டு கவுன்சிலர் உலகராணி தாமோதரன்.தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மகேந்திரன்,திமுக பிரதிநிதிகள் நாகராஜன்,கடல் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து […]