கோவில்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நடக்கிறது
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலுடன் இணைந்த நீலாதேவி-பூதேவி உடனுறை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30மணிக்கு நடை திறக்கப்பட்டது.
காலை 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12 மணி வரை சுந்தர்ராஜப்பெருமாள் சயனக்கோலத்தில் காட்சி அளித்தார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.பூஜைகளை வரதராஜன் ஐயங்கார் செய்தார்
இன்று மாலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கருடசேவை மற்றும் திருவீதி உலா நடைபெறுகிறது