கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் ரூ.26 லட்சம், 45 பவுன் நகைகள் கொள்ளை
![கோவில்பட்டியில் இறைச்சி வியாபாரி வீட்டில் ரூ.26 லட்சம், 45 பவுன் நகைகள் கொள்ளை](https://tn96news.com/wp-content/uploads/2025/01/0655b540-37f6-4653-a048-8f0f09c90d64-850x560.jpg)
கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 50). இவரது மனைவி சவுரால் பேபி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுலைமான் கால்நடைகள் விற்பனை மற்றும் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
முகமது சாலிஹாபுரத்தில் உள்ள இவரது வீட்டின் எதிரே புதிதாக வீடு கட்டி இருக்கிறார். ஆனால், அவர் இரவு நேரம் பழைய வீட்டில் தூங்குவது வழக்கம். புதன்கிழமை இரவு சுலைமான் மற்றும் அவரது மனைவி, 2 மகள்கள் ஆகியோர் பழைய வீட்டில் தூங்கினர்.
மறுநாள் காலையில் , புதிய வீட்டின் வெளிப்புற கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த சுலைமான், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், அதிலிருந்த ரூ.26 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 45 பவுன் நகைகள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்து, டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது.
இந்த கொள்ளை சமபவம் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. கொள்ளையர்கள் பலநாட்கள் நோட்டமிட்டு இந்த கொள்லையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொளையர்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)