• February 12, 2025

Month: January 2025

கோவில்பட்டி

அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;கடம்பூர் ராஜு

தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க – தமிழக முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராசுவை  நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெயரிவிதனர், நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம்,செயலாளர் கோபால்சாமி, பொருளாளர் ஜோசப்ரத்தினம்  மற்றும் பலர் கலந்து கொண்டனர் பின்னர் கடம்பூர் ராஜு  செய்தியாளர்களிடம் கூறியதாவது: […]

கோவில்பட்டி

 கோவில்பட்டி கி.ரா நினைவரங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா

கோவில்பட்டியில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் கி.ரா.நினைவரங்கத்தில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, பொங்கல் விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்,செயலாளர் சக்திசெல்லப்பா முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத்தலைவர் ராஜகோபால்,பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர் பாலமுருகன்,சமூக ஆர்வலர் தங்கராஜ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்/ பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்புகளை ஆர்.ஜே.மணிகண்டன் செய்திருந்தார்.தமிழ்நாடு கலை […]

செய்திகள்

சென்னையில் கனிமொழி எம்.பி.பங்கேற்ற பொங்கல் விழா

சென்னை திமுக 131வது வட்டத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2000 பேருக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா சென்னை அசோக்நகர் – 10வது அவென்யூ கலைஞர் பொதுநல மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி  பேசியதாவது:-  நம் எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் […]

கோவில்பட்டி

தேசிய இளைஞர் தின மாரத்தான் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு                                    .                   

வருடந்தோறும் ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதியில் தொடங்கிய மாரத்தான் போட்டிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்..கல்லூரி உறுப்பினர் சரவணகுமார், முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர. விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் […]

கோவில்பட்டி

விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள்

விளாத்திகுளம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்தமாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக லட்சுமிபுரம், விருசம்பட்டி, சுப்பிரமணியபுரம், வில்வமரத்துப்பட்டி, விளாத்திகுளம் (ராஜீவ் நகர்)உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஜே..எஸ். டபிள்யு . நிறுவனத்தின் சார்பாக வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பொதுமக்களுக்கு வழங்கினார். நிவாரண பொருட்கள் வழங்கிய நிறுவன  தலைவர் தென்னவன், மூத்த மேலாளர் பாரதி மற்றும்   விளாத்திகுளம் மத்திய […]

பொது தகவல்கள்

பொங்கல் விழா விழாவின் தொடக்கம் – நாளை  போகிப்பண்டிகை

தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும், பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும். இதன் தொடக்க நாளாக கொண்டாடப்படுவதே போகி பண்டிகை.. அதாவது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும். “பழையன கழிதலும்…புதியன புகுதலும்” என்பதே போகி பண்டிகையின் நோக்கமாகும். இந்த ஆண்டு நாளை  (ஜனவரி 13ம் தேதி) போகி பண்டிகை வருகிறது இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது, எப்படி கொண்டாட வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். சூரிய பகவான் தன்னுடைய […]

செய்திகள்

நெல்லையப்பர் கோவிலின்  56 வயது காந்திமதி யானை உயிரிழப்பு

நெல்லையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லையப்பர் திருக்கோவில் உள்ளது.  1985-ம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோவிலுக்கு யானை நன்கொடையாக கொடுக்கப்பட்டது.  நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் காந்திமதி யானை முன்னே செல்ல திருவிழா விமரிசையாக நடைபெறும். 56 வயதான யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு சில நாட்களாக நடமாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும்  கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ குழுவினர் அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தும் யானை உறங்காமல் நின்றபடியே […]

ஆன்மிகம்

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது ராஷ்மிகா மந்தனா காலில் காயம்

கர்நாடக மாநிலத்தில்  பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “பீஷ்மா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் ‘அனிமல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாறியுள்ளார். இவர் நடிப்பில் […]

செய்திகள்

தூத்துக்குடி-மதுரை  ரெயில் பாதை திட்டம் ரத்து; பாஜக போராட்டம் அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பிரதமர் மோடி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, நமது ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.தமிழகத்தின் […]