அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;கடம்பூர் ராஜு வலியுறுத்தல்

 அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;கடம்பூர் ராஜு வலியுறுத்தல்

தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க – தமிழக முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராசுவை  நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெயரிவிதனர்,

நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம்,செயலாளர் கோபால்சாமி, பொருளாளர் ஜோசப்ரத்தினம்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்

பின்னர் கடம்பூர் ராஜு  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கோவில்பட்டி தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்த பேச கவன ஈர்ப்பு தீர்மானமாக கொடுத்திருந்தேன். இதில், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள், மான்கள் தொடர்பாக அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

அப்போது காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க சட்டத்தில் இருந்து இடமில்லை. ஒரு கி.மீ. தூரத்துக்கு வந்த அதனை விரட்டலாம். 2 கி.மீ. தூரத்துக்கு அவை வந்தால், அவற்றை பிடித்து மீண்டும் காட்டில் விடலாம். 3 கி.மீ. தூரத்தை தாண்டி வரும்போது அவற்றை சுடலாம் என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பன்றிகளை சுடுவதற்கு யாருக்கு அனுமதி வழங்கப்படும் என நாங்கள் கேட்டதற்கு, முதல்வரிடம் கலந்து பேசி தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார்.

தீப்பெட்டி தொழிலில் ஆண்டுக்கு ரூ.1200 கோடி ஜி.எஸ்.டி. ஈட்டித்தருகிறது. அந்நிய செலவாணி மூலமாக ரூ.400 கோடி வருமான ஈட்டித்தருகிறது.

விவசாயத்துக்கு மாற்றுத் தொழிலாக உள்ள தீப்பெட்டி உற்பத்தியில் அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டுமென கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். இதற்கு மத்திய அரசை எதிர்ப்பாக்க வேண்டிய தேவையில்லை என கோரிக்கையை வலியுறுத்தினேன்.

இதனை கவனத்தில் எடுத்து முதல்வர், பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் தீப்பெட்டி தொழிலாளர்கள் அனைவரையும் நலவாரியத்துக்குள் இணைத்திருப்போம். அதன் மூலம் அவர்களுக்கு பலன்கள் கிடைத்திருக்கும். ஆனால், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தான் கணக்கெடுப்பு நடத்தி தீப்பெட்டி தொழிலாளர்களை நலவாரியத்தில் இணைத்திருகக வேண்டும். இது மாநில அரசின் பொறுப்பு. எனவே, இனியும் காலதாமதப்படுத்தாமல் அனைத்து தீப்பெட்டி தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை – தூத்துக்குடி இருப்புப் பாதை திட்டம் தென்மாவட்ட மக்களின் கனவுத்திட்டமாகும். 2011-12-ம் ஆண்டில் இதற்கு ரூ.2054 கோடி திட்ட மதிப்பீட்டில் 143 கி.மீ. தூரம் இருப்புப்பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் விரைவாக நிலம் எடுத்து கொடுத்த காரணத்தால் மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை 18 கி.மீ. தூரம் ரூ.324 கோடியில் பணிகள் முடிவடைந்து, வெள்ளோட்டமும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 4 ஆண்டுகளாகியும், திருப்பரங்குன்றம், விளாத்திகுளத்தில் நிலம் எடுப்பதற்கான அலுவலங்கள் திறக்கப்பட்டன.

ஆனால், இந்த அலுவலகங்கள் பெயரளவுக்கு செயல்பட்டுள்ளது. நில எடுப்புக்கான பூர்வாங்க பணிகளை செய்யவில்லை. தற்போது இந்த திட்டம் வேண்டாமென மாநில அரசு தெரிவித்துவிட்டதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் மத்திய அரசு அரசியல் செய்தால் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசை மட்டும் சொல்லி தப்பிக்க திமுகவுக்கு தார்மீக உரிமையில்லை. தொடர்ந்து திமுகவினர் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்று எந்த பயனுமில்லை.

இந்த திட்டத்தை நீங்கள் கைவிடவில்லை என்று சொன்னால், திருப்பரங்குன்றம், விளாத்திகுளத்தில் திறக்கப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டது ஏன் என அமைச்சர் கீதாஜீவனிடம் கேட்கிறேன். நில எடுப்பு பணிக்கு நிதி வரவில்லையென்றால், நிதியை கேட்டு பெற வேண்டிய மாநில அரசின் கடமை. பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது.

 உரிமைகளை நிலைநாட்டி, திட்டங்களை பெற்றுத்தருவதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த திட்டம் கைவிடும், தட்டிக்கழிக்கின்றன பாராமுகமாக இருந்த திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளோம்.

இவ்வாறு கடம்பூர் ராஜு கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *