பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ள காடாய் காட்சியளிக்கின்றன. தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழையால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பெஞ்சல் புயலால் மொத்தமாக […]
பெஞ்சல் புயலின் தாக்கம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த புயலின் காரணமாக, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதோடு நிலச்சரிவு ஏற்பட்டு பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 12 பேர் இந்த பெஞ்சல் புயலால் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யா அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவரது வருகைக்கான தேதிகள் 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்றும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து புதின் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது; சேலத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. திருமணிமுத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வடிகால் பணி முறையாக மேற்கொள்ளாததால் இந்த பிரச்சினை.\\ சாத்தனூர் அணையில் […]
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). இவர் இன்று காலை 9.30 மணியளவில் அப்பகுதியில் சாலையில் நடந்த சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4பேர் கொண்ட அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.’;இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலயே ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார், இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து மொட்டார்சைகில்களில் தப்பி சென்று விட்டனர், இந்த […]
நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியலும் உடல் நலமும் மனநலமும் சார்ந்துதான் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித நன்மைகளையும் அளிக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும். தென்னங் கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் […]