தரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
![தரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Koraipaai_200x200.jpg)
நமது முன்னோர்கள் நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியலும் உடல் நலமும் மனநலமும் சார்ந்துதான் விட்டுச் சென்றுள்ளனர். அந்த வகையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித நன்மைகளையும் அளிக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.
தென்னங் கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. முதன்முதலில் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்டன. பின்பு நாணல் புற்களைக் கொண்டும், நீர்ப்பகுதிகளில் வளரும் கோரைப்புற்களைக் கொண்டும் பாய்கள் தயாரிக்கப்பட்டன. இப்போது கம்பளி, பிரம்பு, ஈச்சம், பேரீச்சம், மூங்கில், இலவம் போன்றவற்றில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல்நலனுக்கு உகந்தவையாகும்.
பொதுவாக, தரையில் பாய் விரித்து உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் எனலாம். பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகெலும்பு நேர்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு இளம் வயது கூன் முதுகு விழுவதைத் தடுக்கிறது. கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு இளம் வயது முதுகுவலி வராமலும் தடுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவும். பாயில் படுக்கும்போது பெண்களுக்கு இடுப்பு எலும்பு விரிகிறது. இடுப்பு எலும்பு விரிந்தாலே அறுவை சிகிச்சை இல்லாத சுகப் பிரசவம்தான் .
மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்னை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும். பாயில் இரு கால்களை நீட்டி மல்லாக்கப் படுக்கையில் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறது. ஞாபக சக்தியை அதிகமாகத் தருகிறது. பாயில் தலையணை இல்லாமல் உறங்குவதே சாலச் சிறந்தது.
ஆண்கள் தரையில் பாய் விரித்துப் படுப்பதால் அவர்களின் மார்பகம் மற்றும் தசைகள் தளர்ந்து விரியும். அதோடு, பாய் உடல் சூட்டை உள்வாங்கக் கூடியது. அதனால்தான்…… பெரியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுக்கையில் பாய் இல்லாமல் ஒரு சீர்வரிசையே கிடையாது எனலாம்.
ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தனித்தன்மையை இழக்காது. கட்டிலில் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவது உடல் உஷ்ணம் அடைவதைத் தடுத்து, உடலின் வளர்ச்சியையும் ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தரும்.
ஒரு மாதம் நீங்கள் வீட்டில் பாயில் உறங்கிப் பாருங்கள். உங்கள் உடல் நிலை மன நிலையில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். பிறகு பஞ்சு மெத்தை பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள்.
பாயில படு நோயை விரட்டு என்பது முன்னோர் பழமொழி. தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நம் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்டநாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
தகவல்.:அக்ரி சு.சந்திர சேகரன் அருப்புக்கோட்டை
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)