Month: October 2024

செய்திகள்

பராமரிப்பு பணிகள்: சென்னை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் […]

செய்திகள்

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீர் தர்ணா

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவு வாயிலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக சிவி சண்முகம் கூறியதாவது:- தனது லெட்டர் பேடை போலியாக தயாரித்து அறிக்கை வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நடைபெற்று முடிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு […]

தூத்துக்குடி

ஒவ்வொரு சேவைக்கும் கட்டணத்துடன் சுவரொட்டி; கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.  இந்த அலுவலக சுவரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டியில்  கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் 200 ரூபாய் (15 நாட்கள் ) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும்  இறப்பு சான்றிதழ் ரூ.300, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை

Xதிருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 7.11.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.  எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி […]

செய்திகள்

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு: மயக்கமடைந்த மாணவிகள்

சென்னை திருவொற்றியூர் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசம் வீசியதாக கூறப்படுகிறது. இதில் 3 மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மயக்கமடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தகவல் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாயு நெடி எந்த பகுதியில் இருந்து வெளியானது என்பது […]

செய்திகள்

சான்ட்னரின் சுழலில் சாய்ந்த இந்தியா: 156 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா – நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர்.இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை […]

சினிமா

ராணுவ வீரர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்ட அமரன்

கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், ராணுவ பின்னணி என ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் என […]

சினிமா

விரைவில் வெளியாகும் கைதியின் இரண்டாம் பாகம்

மாநகரம் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் கைதி. இப்படத்தை எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரில் இணைந்து தயாரிக்கப்பட்டது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்தார். இதில் நடிகர் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியை இல்லாமல் உருவான கைதி திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண்களுக்கான பூங்கா : கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9.91 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம், நடுநிலைப்பள்ளி கட்டிடம், பூங்காக்கள், நடைபயண பக்தர்கள் ஓய்விடப் பூங்கா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்,. விழாவுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலை வகித்தார், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமை தாங்கினார், விழாவில் கனிமொழி எம்பி பேசியதாவது:-  இன்றையதினம் மகளிருக்கான பூங்காவினை திறந்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி […]