ஒவ்வொரு சேவைக்கும் கட்டணத்துடன் சுவரொட்டி; கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலராக பிரபா கனி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த அலுவலக சுவரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டியில் கொம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் விலைப்பட்டியல்
சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் 200 ரூபாய் (15 நாட்கள் ) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இறப்பு சான்றிதழ் ரூ.300, வாரிசு சான்று ரூ.500, அடங்கல் ரூ.1,௦௦௦,கூட்டுப்பட்டா ரூ.4௦௦௦, தனிப்பட்டா ரூ.8௦௦௦,, நத்தம் காலிமனை ரூ,.10 ஆயிரம், சென்ட் மூன்றுக்கு ரூ.45 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது,
கிராம நிர்வாக அலுவலர் பெயர் பதிவு போட்டு அவர் போன் நம்பரை போட்டு ஜிபே மூலம் பணம் செலுத்தலாம். கடன் கிடையாது என்று என சுவரொட்டி குறிப்பிடப்பட்டு இருந்தது
இதனை பார்த்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது சமூக வலைத்தளங்களிலும் பரவியது. தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் ஒட்டப்பட்ட சுவரொட்டி உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபா கனியிடம் கேட்டபோது யாரோ மர்ம நபர்கள் வேண்டுமென்றே என்னை களங்கப்படுத்தும் நோக்கில் சுவரொட்டி ஒட்டி சென்றுள்ளனர். இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றார்.