விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீர் தர்ணா

 விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீர் தர்ணா

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவு வாயிலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக சிவி சண்முகம் கூறியதாவது:-

தனது லெட்டர் பேடை போலியாக தயாரித்து அறிக்கை வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நடைபெற்று முடிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும்.

இதே போன்று விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் போட்டியிடுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை கேட்காமல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பிரச்சாரங்கள் சிறுமைப்படுத்தி கழகத்திற்கு மாறாக வேட்பாளர் செயல்படுவதாக தன் பெயரில் போலியான அறிக்கையை மர்ம நபர்கள் தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும்.

கடந்த 3 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி., காவல் நிலையத்தில் 20 மேற்ப்பட்ட புகார்கள் அளித்தும் திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்று இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

தான் வருவது தெரிந்தும் வேண்டுமென்றே வெளியே சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை சந்திக்கும் வரை தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *