தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை

 தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை

Xதிருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 7 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 7.11.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.12.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது

இவ்வாறு  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *