• November 1, 2024

Month: October 2024

செய்திகள்

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

இயற்பியல்,வேதியியல்,மருத்துவம்,இலக்கியம்,பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும்.,அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 117 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு வென்ற அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசை உருவாக்கிய ஆல்ஃபிரெட் நோபலின் நினைவு தினத்தன்று வழங்கப்படும். தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று […]

செய்திகள்

‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ புத்தகம்; வாங்கி பார்த்த வாசகர்களுக்கு அதிர்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஜேசன் டுடேஷ் என்பவர் எழுதி, மைக்கேல் போல்ஸ் என்பவரால் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ‘கமலா ஹாரிசின் சாதனைகள்’ என்ற பெயரில் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஹாரிசின் 20 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் நடந்த விசயங்கள் இந்த புத்தகத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் அமேசான் […]

செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்துக்கு எதிரான 3-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஆட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து […]

கோவில்பட்டி

தேசிய ஆக்கி போட்டிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் தேர்வு

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், ஆண்டுதோறும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது இந்த ஆண்டுக்கு  14 வயதுக்குட்பட்டவருக்கான தமிழக ஆக்கி அணி தேர்வு  ஓசூரில் நடைபெற்றது இதில் கோல் கீப்பராக ஜெகதீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். 19  வயதுக்குட்பட்டோருக்கான அணி  தேர்வு ராமநாதபுரத்தில் நடைபெற்றது இதில் தடுப்பு ஆட்டக்காரராக தனுஷ் பாண்டியன் தேர்வானார். இவர்கள் இருவரும் கோவில்பட்டி ராஜீவ்காநதி விளையாட்டு கழக வீரர்கள் ஆவர், தேசிய போட்டியில்  கலந்துகொண்டு தமிழக அணிக்காக விளையாட உள்ள இரு வீரர்களையும் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புத்தக திருவிழாவுக்கு தினமும் அழைத்து வரப்படும் மாணவ, மாணவிகள்

தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா கடந்த .3ம் தேதி தொடங்கியது வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் தினமும் அழைத்துவரப்படுகின்றனர்.  ஒரே நேரத்தில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் குவிந்து வருவதால் அரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலைக்குன்றை பாதுகாக்ககோரி  கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் மனு

கோவில்பட்டியின் மிக முக்கிய அடையாளம் சொர்ணமலை கதிரேசன் கோவில் மலைக்குன்று… திருநெல்வேலி மார்க்கத்தில் இருந்து வரும் போது கோவில்பட்டி நகர்  வரவேற்கும் விதமாக இந்த் மலைக்குன்று வெகு தூரதில்லேயே தெரியும். இந்த் மலைக்குன்றில் உள்ள கோவிலில் வேல் வடிவத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது./ இங்கு தினமும் பூஜைகள்  நடப்பதுடன் மதிய உணவும் பரிமாறப்படுகிறது. முன்பு கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மட்டும் இருந்தன. மலைக்குன்றுக்கு வாகனங்கள் […]

செய்திகள்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியை தொடருமா இந்தியா

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும்., பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நான்கு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். துபாயில் நடைபெறும் […]

செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்தும், வளர்ச்சித் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் […]

செய்திகள்

தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று, அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி * திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நியமனம். * தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நியமனம். * திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி […]