கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது . கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்க வல்லது. அப்படிப்பட்ட கல்வியின் ஸ்ருபமாக சரஸ்வதி தேவி திகழ்கிறார். சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெறவும், ஞானம், நினைவாற்றல், கலைகளில் தேர்ச்சி போன்றவற்றில் சிறப்பாக திகழ கலைமகளை […]
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2-டெஸ்ட் மற்றும் 3-டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்குயிடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்குயிடையிலான 2-வது டி20 போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 […]
இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை […]
விடுதலை போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதிமுக சார்பில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் சத்யா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட […]
தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளை பார்த்து எனக்கு பரிதாபம் மட்டுமே வருகிறது.கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால்,திராவிட கொள்கையினை நான் எந்தளவுக்கு சரியாக பின்பற்றுகிறேன்.,என்பதற்கான சான்றிதழாகவே இதனை பார்க்கிறேன். தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர்.அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் […]
இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள கிராம விவசாய பெருமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு நாளை கோவில்பட்டி வேளாண்மை துறை சார்பாக நமது கிராமத்தில் மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றது 10 கிலோ இயற்கை உரம், நானோ யூரியா மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது தேவைப்படும் விவசாயிகள் நாளை காலை 11 மணியளவில் கோவில்பட்டி வேளாண்மை துறை அலுவலகத்துக்கு வந்து […]
கோவில்பட்டி போராட்டத்துக்கு, பயன்படாத அடிபம்பை தூக்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று போராட்டதில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர் ரெங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரஞ்சனி கண்ணம்மா,செல்லையா, இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், சிபிஐ நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பயன்படாத அடிபம்பை கையோடு எடுத்து […]
மகளிர் டி20 உலக கோப்பை 9-வது தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20-ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பெத் மூனி 40 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற […]