இளையரசனேந்தல் குறுவட்ட விவசாயிகளுக்கு நாளை மானியவிலையில் இடுபொருட்கள்
இளையரசனேந்தல் வேளாண்மை உதவி அலுவலர் த.திருவேணி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இளையரசனேந்தல் குறுவட்டத்தில் உள்ள கிராம விவசாய பெருமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு நாளை கோவில்பட்டி வேளாண்மை துறை சார்பாக நமது கிராமத்தில் மக்காச்சோளம் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றது
10 கிலோ இயற்கை உரம், நானோ யூரியா மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்படுகிறது தேவைப்படும் விவசாயிகள் நாளை காலை 11 மணியளவில் கோவில்பட்டி வேளாண்மை துறை அலுவலகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ளவும்
தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் கார்டு ஜெராக்ஸ் -1 ரேஷன் கார்டு ஜெராக்ஸ் – 1 பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -1 பட்டா – 2 1/2 ஏக்கருக்கு -1 வங்கி கணக்கு எண் : 1 போட்டோ -1
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.