• February 7, 2025

காலால் மிதிக்கும் புகைப்படம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

 காலால் மிதிக்கும் புகைப்படம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளை பார்த்து எனக்கு பரிதாபம் மட்டுமே வருகிறது.கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால்,திராவிட கொள்கையினை நான் எந்தளவுக்கு சரியாக பின்பற்றுகிறேன்.,என்பதற்கான சான்றிதழாகவே இதனை பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர்.அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது ஏச்சுக்களையும்,பேச்சுக்களையும் தொடுத்தனர்.நம் கழக தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.

அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும்,மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையை பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.

கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம்.இதற்கு எதிர்வினையாற்றுவதை,உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து தந்தை பெரியார், அண்ணல்அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத்தலைவர் வழியில் பகுத்தறிவு,சமத்துவ பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்.
இவ்வாறு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *